புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிவகார்த்திகேயன் கை வசம் வெயிட்டா 5 படங்கள்.. விஜய், அஜித் பட இயக்குனருடன் பேச்சு வார்த்தை?

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் காட்டில் இப்போ அதிர்ஷ்ட மழை கண்ணா பின்னா என்று கொட்டிக் கொண்டிருக்கிறது. சிவாவின் சினிமா கேரியரை இனி அமரனுக்கு முன், அமரனுக்கு பின் என பிரித்துக் கொள்ளலாம் போல.

அமரன் ரிலீஸ் ஆவதற்கு முன் வரைக்கும் விஜய் கிட்ட இருந்து துப்பாக்கி வாங்கினால் இவர் அடுத்த விஜயா என்று கேள்வி கேட்டவர்கள் தான் இப்போது சிவகார்த்திகேயன் தான் அடுத்து நம்பர் ஒன் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கைவசம் இருக்கும் வெயிட்டான ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் கை வசம் வெயிட்டா 5 படங்கள்

SK 23: அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டார். இந்த படத்திற்காகத்தான் சிவகார்த்திகேயன் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறார். முருகதாஸின் கடந்த சில முந்தைய படங்கள் மாதிரி இல்லாமல், இந்த படம் கஜினி, துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது.

SK-24: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 24 ஆவது படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைகிறார். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான டான் படம் இளைஞர்கள் மத்தியிலே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு ஜாலி மூட் ஹீரோவாக ரசிகர்களை மகிழ்விக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

SK 25: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் இந்தி எதிர்ப்பு பற்றியது. மேலும் ஜெயம் ரவி, அதர்வா போன்றவர்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

SK 26: சிவகார்த்திகேயன் இயக்குனர் விநாயகர் சந்திரசேகரனுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். மணிகண்டனை வைத்து குட் நைட் படத்தை இயக்கிய இயக்குனர் தான் இவர். குட் நைட் என்னும் யதார்த்த கதையின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இந்த இயக்குனர், கண்டிப்பாக சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SK 27: ரசிகர்கள் அடுத்த தளபதி என்று சொன்னாலும் போச்சு, சிவகார்த்திகேயன் தளபதியின் கடைசி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் H வினோத்துடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறார். விஜய்க்கு மட்டுமில்லாமல் இவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் படம் பண்ண பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

- Advertisement -

Trending News