Connect with us

Cinemapettai

அந்தப் படம்னா எனக்கு சம்பளமே வேண்டாம்.. கோடியில் புரளும் சிவகார்த்திகேயனின் பேச்சா இது?

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்தப் படம்னா எனக்கு சம்பளமே வேண்டாம்.. கோடியில் புரளும் சிவகார்த்திகேயனின் பேச்சா இது?

தற்போதைய சினிமாவில் முன்னணி நடிகர்களை தாண்டி அடுத்த கட்ட நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது துறுதுறு நடிப்பால் குடும்ப ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழகமெங்கும் வெற்றிநடை போட்டது. இதன் காரணமாக தொடர் தோல்வியில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் மீண்டும் நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஒரு படத்திற்கு சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன் திடீரென இந்த படம் என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்! சிவகார்த்திகேயன் மற்றும் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பாதி படப்பிடிப்பு முடிந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படத்திற்காக தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் 75 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஜனவரியில் மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நின்றது அனைவரும் அறிந்ததே. டிசம்பர் 20ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top