செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

தனுஷை முடித்து விட்ட சிவகார்த்திகேயன்.. குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆயிட்டாரே!

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நடிகர் தனுஷின் பங்கு இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இயக்குனர் பாண்டிராஜ் மூலம் மெரினா படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் அறிமுகமாகி இருந்தார்.

இருந்தாலும் தனுஷ் நடித்த மூன்று படத்தில் நடித்த பிறகு தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு ஓரிரு பட வாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்தார். அதன் பின்னர் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பர நட்பை பரிமாறி கொள்ளவில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனுஷ் பன்முக திறமை கொண்ட கதாநாயகனாக பல மொழிகளில் தன்னை அடையாளப்படுத்தினார்.

தனுஷை முடித்து விட்ட சிவகார்த்திகேயன்

சமீபத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் மொத்த மார்க்கெட்டும் உச்சத்திற்கு சென்று விட்டது என தான் சொல்ல வேண்டும்.

அமரன் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆன ஒன்றிரண்டு நாட்களிலேயே 100 கோடியை தாண்டி விட்டது. ரஜினி மற்றும் விஜய்க்கு பிறகு சீக்கிரமாக 100 கோடி வசூலில் இணைந்தது சிவகார்த்திகேயன் படம் தான்.

அதுமட்டுமில்லாமல் தனுஷின் ஒரு வசூலையும் முறியடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனுஷ் இயக்கி நடித்த அவருடைய ஐம்பதாவது படமான ராயன் கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி 156 கோடி வசூல் செய்தது. ஆனால் இந்த வசூல் சாதனையை 6 நாட்களில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் அமரன் 200 கோடி வசூலை நெருங்கும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News