Sivakarthikeyan-Ilayaraja

‘இளைய தளபதி’ விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களின் இயக்குனர்கள் ஆன ராஜா மற்றும் நெல்சன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் பிரான்சிஸ் மார்க்கஸ். இவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ஓய்.

ஜுபிடர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் தான் பேசப்பட்டதாம். ஆனால் அவர் அப்போது பிஸியாக இருந்ததால், இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம். இத்தகவலை இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ் தற்போது வெளியிட்டுள்ளார். ஓய் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.