fbpx
Connect with us

Cinemapettai

சிவகார்த்திகேயனுக்கு விருந்து வைத்த பிரபல நடிகரின் மகன்.. அதுவும் வீட்டிற்கு அழைத்து

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு விருந்து வைத்த பிரபல நடிகரின் மகன்.. அதுவும் வீட்டிற்கு அழைத்து

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெற்றி திரைப்படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்நிலையில் இரும்புத்திரை பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

தெலுங்கு உலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகன் அகில், சிவகார்த்திகேயனை அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். பிறகு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் அங்கிருந்து விடைபெற்றார்.தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயனை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

சிவகார்த்திகேயன் தமிழில் தயாரித்த கனா திரைப்படம் தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் சிவகார்த்திகேயனே பயிற்சியாளராக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கலந்து கொண்ட புகைப்படம் :

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top