நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டு ஆதரவாக மிகவும் ஆக்ரோஷமாக தனது ஆதங்கத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் பெருமளவில் நடந்து வருகிறது, நாளையும் பல இடங்களில் தொடரும் என்று சொல்லப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு ட்விட்டரில் போராட்ட இளைஞர்களுக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.

https://twitter.com/iam_str/status/821421650012999680

இளைஞர் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஏரியாவின் முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து உங்களால் முடிந்த கூட்டத்தை கூட்டி அமைதியாக போராட்டங்களை நடத்துங்கள், மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் பக்கங்களில் இடையூறு கொடுக்காத படி நடத்துங்கள், தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளுங்கள்.

நமக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை கைவிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.