Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தொட்டிஜெயாவாக மாறிய சிம்பு.. அட்ராசக்க கெட்டப்பில் அசத்தும் கெட்டவன்
தமிழ் சினிமாவில் அடிக்கடி தனக்குத்தானே எண்ணை ஊற்றி வழுக்கி விழும் நடிகர் என்றால் அது சிம்பு மட்டும்தான். திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் தனது ஸ்டார் அந்தஸ்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்.
தற்போது ஐயப்பனுக்கு மாலை போட்டு திரும்பி வந்தவுடன் சிம்பு அதனை உணர்ந்து விட்டார் போல. மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வெங்கட்பிரபுவின் மாநாடு படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

simbu-black
மாநாடு படத்தில் நடிப்பதற்கு முன்பாக முதலில் உடம்பை குறைக்க வேண்டுமென சிம்பு வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

simbu-black-01
வழக்கம்போல் ஏமாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது உண்மையிலேயே உடல் எடையை குறைத்து பழைய மன்மதன் கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
