fbpx
Connect with us

Cinemapettai

யார் சொன்னா சிம்புவுக்கு மாஸ் இல்லன்னு.. இந்த ஒத்த வீடியோ போதும்.. ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய STR

Videos | வீடியோக்கள்

யார் சொன்னா சிம்புவுக்கு மாஸ் இல்லன்னு.. இந்த ஒத்த வீடியோ போதும்.. ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய STR

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளரவேண்டிய சிம்பு, சோம்பேறித்தனத்தால் ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதானவரைப்போல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியனார்.

ஆனாலும் இப்படி பட்ட ரசிகர்கள் கிடைக்க சிம்பு கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு ரசிகர்களா என அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்துள்ளனர்.

simbu-birthday

simbu-birthday

இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடும் சிம்புவின் வீட்டின்முன் ரசிகர்கள் இரவு 12 மணி அளவில் கூடியிருந்தனர். யாரும் எதிர்பாராத வகையில் சிம்பு தனது ரசிகர்களுடன் ஆட்டம் ஆடி ரசிகர்களை சந்தோஷத்தில் மூழ்கடித்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிட்ட சிம்புவை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். நீண்ட இழுபறிகளுக்கு பிறகு மாநாடு படம் தொடங்கி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று உள்ளனர்.

சிம்பு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் வைரல் ஆகி வருகின்றன.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் STR சார்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top