fbpx
Connect with us

Cinemapettai

நித்யானந்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய மோடி.. டுவிட்டரில் காரித் துப்பாத குறையாக திட்டிய சித்தார்த்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நித்யானந்தாவிடம் ஆசீர்வாதம் வாங்கிய மோடி.. டுவிட்டரில் காரித் துப்பாத குறையாக திட்டிய சித்தார்த்

சினிமா நடிகர்களையும் தாண்டி சர்ச்சைகளால் உலக பேமஸ் ஆனவர் நித்யானந்தா. பெண்களை மயக்குவதில் வல்லவராக உள்ள இவரை தற்போது உள்ளூர் போலீஸ் முதல் வெளியூர் போலீஸ் என்று அனைவரும் தேடிக் கொண்டிருப்பது தான் தற்போதைய இந்தியாவின் ஹாட் டாபிக்.

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே தேடும் குற்றவாளியிடம் ஒரு நாட்டின் பிரதமர் ஆசிர்வாதம் வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா மீது பெண் குழந்தைகளை கடத்துதல், சிறுபிள்ளைகளை அனுப்பி மடத்திற்கு நிதி திரட்டுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனையின் வரத் தொடங்கின. தற்போது இவர் மீதான குற்றங்கள் அனைத்தும் வலுப்பெற்றுள்ளது.

இதனால் எப்படியாவது இவரை கைது செய்தாக வேண்டும் என குஜராத் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடையில் தனி தீவு ஒன்றை வாங்கி அதை தனிநாடாக அங்கீகரிக்க சொல்லி ஐநாவிடம் கேட்டதாகவும் பல செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படத்தை பார்த்த நடிகர் சித்தார்த் மோடியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஒரு பிராடு, ஜோக்கர் இடம் நாட்டின் தலைவர் தலைகுனிந்து ஆசிர்வாதம் பெற்றது நாட்டையை தலைகுனிய செய்ததாகவும் பெரும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இவருடைய கருத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top