பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

SRK

இவர் பாலிவுட்டில் செண்டிமெண்ட் கலந்த காதல் கதைகள் எடுப்பதில் வித்தகர். தனுஷின் ‘ரான்ஜஹானா’ அதாங்க ‘அம்பிகாபதி’, மாதவன் நடிப்பில் ‘தனு வெட்ஸ் மனு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.

SRK

மேலும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்து வருகின்றது.

shahrukh khan
shahrukh khan

இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார்
ஷாருக்கானும் சல்மான் கானும் 10 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

shahrukh khan

மேலும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஷாருக்கானை குள்ள மனிதராக படம் எடுக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.