Tamil Cinema News | சினிமா செய்திகள்
நண்பரால் ஏமாந்த முன்னாள் காமெடி நடிகர்.. ஏழு அடுக்கு மாடி வீட்டை இழந்த பரிதாபம்
1980,90-களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி, செந்தில் தான். படம் சரியாக இல்லை என்றாலும் இவர்களது காமெடி காட்சிகளுக்காகவே கூட்டம், கூட்டமாக திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வந்த வரலாறுகள் உண்டு.
2013-ம் ஆண்டு நடிகர் செந்தில் சாலிகிராமம் பகுதியில் ஏழு மாடி அடுக்கு கொண்ட வீடு ஒன்றினை வாங்கியுள்ளார். அந்த வீட்டை சகாயராஜ் என்பவருக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாடகைக்கு விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த சென்றுவிட்டார்.
இதற்கிடையில் சகாயராஜ் செந்திலுக்கு தெரியாமல் அந்த வீட்டை சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை லீசுக்கு விட்டு சம்பாதித்து வருகிறார் என தெரியவந்தது. இதுகுறித்து நேரடியாக பேசச் சென்ற செந்திலையும் அவமரியாதை செய்துள்ளார்.
இதனால் செந்தில் போலீசாரிடம் புகார் செய்ய, அவர்கள் வழக்கை விசாரித்து அவரது வீட்டை மீட்டுத் தந்தனர்.
