fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸுக்கு பிறகு சென்றாயனுக்கு விழுந்த அடி.. மீண்டு வருவாரா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸுக்கு பிறகு சென்றாயனுக்கு விழுந்த அடி.. மீண்டு வருவாரா?

தமிழ் சினிமாவில் மூடர்கூடம் படத்தின் மூலம் பிரபலமானவர் சென்ராயன். வாசுகி என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் மூடர்கூடம் திரைப்படம் அவரது நடிப்புக்கு சான்றாக விளங்கியது.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற சென்ராயன், பிக்பாஸ் வீட்டில் நான் அப்பா ஆகிவிட்டேன் என கத்தியது இன்றும் பலரது காதுகளில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அதன் பிறகு நல்ல கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டும் என விரும்பியவருக்கு எதிர்பார்த்தபடி எதுவும் அமையவில்லை. யோகி பாபு போல அவருக்கும் சரியான கதாபாத்திரங்கள் அமைந்தால் அவரும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

மலையாள சினிமா உலகில் நடிப்பில் அசத்தும் நாயகர்களுக்கு சிறப்பான வேடங்களே அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் தமிழ் சினிமாவிலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top