Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசுரன் படத்தை ஆகா!ஓகோ! என்று புகழ்ந்து தள்ளிய சீமான்.. ஆனந்தத்தின் ஆர்ப்பரிப்பில் படக்குழு
நடிகர் சீமான் சமீப காலமாக நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சி ஒன்றை நிர்வகித்து வருகிறார். கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இடம்பெற்ற இந்த கட்சியினர் கணிசமான அளவு ஓட்டுகளை பெற்றனர். இதனால் இந்த கட்சியின் மீது நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.
மேலும் இளைஞர்களின் தலைவராக கொண்டாடப்படும் சீமான், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை பகிரங்கமாக பொது மேடையிலேயே கூறி வருகிறார்.
இந்நிலையில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தியை பற்றி சர்ச்சையை கிளப்பிய வாதத்தை திரும்ப பெற மாட்டேன் என உறுதியுடன் நின்று அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என முன்மாதிரியாக திகழ்ந்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தினைப் பற்றிய தன் கருத்துக்களை கூறி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, அசுரன் எனும் பிரமிப்பிலிருந்து இன்னும் நான் மீள வில்லை. தமிழ் சமூகம் எக்காலத்திற்கும் கொண்டாடப்படவேண்டிய திரைக்காவியம் என ஏகபோகமாக பாராட்டித் தள்ளியுள்ளார்.
இதற்கு படக்குழுவினரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
