fbpx
Connect with us

ரோஹித், அஷ்வினுக்கு ஒரே செல்லப் பெயரை வைத்த சதிஷ். அடேங்கப்பா என்ன ஒரு லாஜிக்

Sports | விளையாட்டு

ரோஹித், அஷ்வினுக்கு ஒரே செல்லப் பெயரை வைத்த சதிஷ். அடேங்கப்பா என்ன ஒரு லாஜிக்

அக்டோபர் 2 தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகள் துவங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் சில ஆச்சர்யங்கள் காத்துக்கொண்டிருந்தது, ஒபெனாரக சொதப்பிய ராகுலுக்கு பதில் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விரிதிமன் சஹா சேர்க்கப்பட்டார். மேலும் சில போட்டிகளாக வெளியே இருந்த அஷ்வின் அவர்களுக்கும் சேர்க்கப்பட்டார்.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா (303) ரன்கள் குவித்தார். மேலும் இந்தியர்களில் ஒபெனராக இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த பெருமை சுனில் கவ்ஸ்கரிடம் தான் இருந்தது (மூன்று முறை). தற்பொழுது ரோஹித்தும் இணைந்து விட்டார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் ( விஜய் ஹசாரே, சுனில் காவஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே) என்ற பெருமையையும் தட்டி சென்றார். ஒபெனர் என்ற ரோலில் தனது முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளது ரோஹித் மட்டுமே.

மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் என போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இவர்கள் இருவரையும் அட்சயபாத்திரத்துடன் ஒப்பிட்டு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் சதிஷ்.

ரன்கள் குவிப்பதில் ரோஹித் சர்மா வல்லவர், விக்கெட்டுகள் வீழ்த்துவதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாம்பவான் என சொல்லியுள்ளார். அட ஆமாங்க எடுக்க எடுக்க என்றுமே குறையாத அட்சய பாத்திரம் தானே இருவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top