fbpx
Connect with us

“எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா?” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடிகர் சதீஷ் பதிவிட்ட ட்வீட் .

News | செய்திகள்

“எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா?” ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடிகர் சதீஷ் பதிவிட்ட ட்வீட் .

சதிஷ் இன்று ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க மோஸ்ட் வான்டேட் என்றால் இவர் தான். சில வருடங்களுக்கு முன் சந்தானம் செய்து வந்த நட்பு ரோலை இன்று கனக் கச்சிதமாக செய்பவர் இவர் தான். சதீஷ் ட்விட்டரில் ஆக்டிவாகவே இருப்பவர். படத்தில் உள்ள வசனங்களை போலவே இவர் ட்விட்டர் பதிவிலும் புதுமை , தனி ஸ்டைல் உண்டு.

இந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் இந்த போட்டோவுடன் ஸ்டெர்லைட் ஆலை தடை செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Sathish Twitter

“லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர், ஆஸ்ரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாத்திக்கிட்டு, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போரது தான் #ஸ்டெல்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கிற பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..? ஸ்டெர்லைட்டை மூடுங்கள் ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top