fbpx
Connect with us

Cinemapettai

பஸ்ல பொண்ணுங்கள உரசுவேன்னு சொன்னது ஒரு குத்தமா? பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊத்தும் சித்தப்பு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பஸ்ல பொண்ணுங்கள உரசுவேன்னு சொன்னது ஒரு குத்தமா? பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊத்தும் சித்தப்பு

இதுவரை வெளிவந்த ரியாலிட்டி ஷோக்களிலேயே கலாச்சார சீர்கேடு என ஏடாகூடமாக பெயரெடுத்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். திட்டிக் கொண்டே இருந்தாலும் மக்களால் அந்த நிகழ்ச்சியை ஒரு நாள் கூட பார்க்காமல் இருக்க முடியாதது தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி.

இதில் கலந்து கொண்ட நிறைய முகங்கள் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகர்களாக இருந்து வருகின்றனர். மேலும் பலர் இதில் பெயரைக் கெடுத்துக் கொண்டும் சென்றுள்ளனர்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பெயரை கெடுத்துக் கொண்டவர்தான் பருத்திவீரன் புகழ் சித்தப்பு சரவணன்.

ஆரம்பத்தில் இவர் மீது மக்களுக்கு பெரிய மரியாதை இருந்தது. மேலும் அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்து வந்தனர். ஆனால் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் கூறிய உண்மை இவரின் தலையெழுத்தை மாற்றி விட்டது.

கல்லூரி படிக்கும் காலங்களில் பஸ்ஸில் செல்லும்போது பெண்களை உரசுவேன் என்று கூறியது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சேனல் நினைத்திருந்தால் அந்த பதிவை நீக்கி இருக்கலாம். ஆனால் டிஆர்பி காக இப்படி பண்ணியது கேவலமான செயல் எனவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியே ஒரு போங்காட்டம் தான் எனவும், அவர்கள் கூறுவதைப் போல நடந்து கொள்ள வேண்டும் எனவும் முக்கிய கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும் பணம், புகழ், பேருக்காக தான் அதில் கலந்து கொண்டதாகவும், ஆனால் உண்மையாக இருக்க வேண்டும் என நான் கூறிய உண்மை என் தலையெழுத்தை மாற்றி விட்டது எனவும் வருத்தப்பட்டுள்ளார்.

நல்லவனா இருக்கலாம்.. ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது சித்தப்பு!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top