Connect with us

Cinemapettai

சேலத்தில் சினிமாவில் சாதிக்க துடிப்போருக்காக நடிகர் சரவணன் கொண்டு வரும் வரப்பிரசாதம்

paruthiveeran

India | இந்தியா

சேலத்தில் சினிமாவில் சாதிக்க துடிப்போருக்காக நடிகர் சரவணன் கொண்டு வரும் வரப்பிரசாதம்

சேலம்: சேலம் அருகே வட்டக்காடு பகுதியில் சினிமாவிற்காக தான் வாங்கிய இடத்தில் பெற்றோர் நினைவாக நடிகர் சரவணன் கோவில் கட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சரவணன். இவர் 90களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக ரீஎன்ட்ரி ஆனார். அதற்கு பின் கடைக்குட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் சரவணன் நடித்து வருகிறார்.

நடிகர் சரவணன் சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே வட்டக்காடு பகுதியில் சினிமாவிற்காக 4 ஏக்கர் பரப்பளவில் காலிமனை ஒன்றினை ஒரு ஆண்டுக்கு முன்பு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ள அந்த இடத்தில் தன் பெற்றோர்கள் நினைவாக நடிகர் சரவணன் முனியப்பன் கோயில் ஒன்றை நிறுவியுள்ளார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட முனியப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், பிக்பாஸ் பிரபலங்கள் பரணி, கவின், ரித்திகா, சாண்டி மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்கள், சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்க உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சேலம் மாடர்ன் தியேட்டர் போல சினிமாவிற்காக பிரத்தியேக ஸ்டூடியோ கட்டப்பட உள்ளதால் சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in India | இந்தியா

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top