fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

KGF 2 வில் இணைந்த வட சென்னை பட பிரபலம். செம்ம அப்டேட் உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

KGF 2 வில் இணைந்த வட சென்னை பட பிரபலம். செம்ம அப்டேட் உள்ளே

Kolar Gold Fields : Chapter 1 கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இப்படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. கன்னட சினிமாவாக ஆரம்பித்து இந்திய அளவில் ஹிட் ஆன படம். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஷூட்டிங் துவங்கிவிட்டது. இப்படத்தில் வில்லனாக அதிரா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்திரா காந்தி போன்ற ரோலில் நடிக்க ரவீனா டாண்டன் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படத்தில் தான் இணைந்துள்ளதாகவும், அம்சமான டீம், நட்பான இயக்குனர் பிரசாந்த் நீல், ராக்கி பாய் ரசிகர்களுக்கு என் சலாம் என நடிகர் சரண் சக்தி ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

saran sakthi

சரண் சக்தி – வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக, தனுஷின் மச்சான் வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக தனுஷ் இவர் வீட்டில் பெண் கேட்டு செல்லும் காட்சியில் இவர் பலரது கவனத்தையும் பெற்றார். இதுமட்டுமின்றி சகா படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

வாழ்த்துக்கள் சரண் சக்தி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top