fbpx
Connect with us

Cinemapettai

சினிமாவில் களமிறங்கும் நடிகர் சந்தானத்தின் மகன்.. அதுவும் இந்த படத்துலயா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவில் களமிறங்கும் நடிகர் சந்தானத்தின் மகன்.. அதுவும் இந்த படத்துலயா?

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் சந்தானம். ஆரம்பத்தில் சில படங்கள் சறுக்கினாலும் விடா முயற்சியால் தற்போது தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சந்தானத்தின் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் டகால்டி திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

டகால்டி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதே படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீண்டும் ஒரு வாரிசு நடிகர் சினிமாவில் வலம் வர இருக்கிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி தனது மகனை சிந்துபாத் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sandhanam-son

sandhanam-son

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top