சமுத்திரகனி நடித்து வரவேற்கப்படாத நான்கு படங்கள்.. அத்தனையும் அபாரம்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி நாடோடிகள், நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் சமுத்திரகனி. இதைத் தொடர்ந்து ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நடிப்பில் வெளியான சாட்டை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமுத்திரகனியின் சில படங்கள் வரவேற்கப்படவில்லை.

சித்திரை செவ்வானம் : கடந்த ஆண்டு ஓடிடிவியில் வெளியான திரைப்படம் சித்திரை செவ்வானம். இப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடித்திருந்தனர். சித்திரை செவ்வானம் படம் அப்பா, மகளுக்கு இடையே ஆன பாசத்தை நெகிழ்வுடன் சொன்ன படம்.

ரைட்டர் : சமுத்திரகனி, ஹரிகிருஷ்ணன், இனியா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ரைடர். இப்படத்தில் காவல்துறையினருக்கு சங்கம் வேண்டும் என நினைக்கும் ரைட்டர் ஆக சமுத்திரகனி நடித்திருந்தார். அப்பாவி கைதியாக மாட்டிக்கொள்ளும் ஹரிக்கு சமுத்ரகனியின் உதவ முன்வருகிறார். அதன்பின் ஹரி இந்த வழக்கிலிருந்து தப்பிக்கிறார் என்பதே ரைட்டர் படம்.

வினோதய சித்தம் : கடந்த ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வினோதய சித்தம். நாம் வாழும் வாழ்க்கையை மற்றவர்களுடன் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தை வினோத சித்தம் படம் சொல்லியுள்ளது.

ஆண் தேவதை : தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண் தேவதை. நடுத்தர குடும்ப பிரச்சனையை கொஞ்சம் வித்யாசமாக ஆண் தேவதை படம் சொல்லியிருந்தது. வசதியாக வாழ நினைக்கும் ஒரு பெண், அதனால் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதே ஆண் தேவதை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்