ராஜமௌலி கொடுத்த 2 கோடி சம்பளம்.. அடுத்தடுத்து 8 படங்கள்.. அக்கட தேசத்திற்கு பாயும் சமுத்திரகனி

தமிழ் சமூகத்தின் மீது உள்ள பற்று, ஒரு போராளி, இளைஞர்களை தூக்கி பிடிக்கும் ஒரு தூண், சினிமாவில் ஒரு நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் சமுத்திரக்கனி.

தற்போது இவர் தெலுங்கில் எட்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் RRR படம்தானாம்.

இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் விடுதலை போராட்ட வீரராகவும், மெகா ஸ்டார் ராம்சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், அஜய்தேவ் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி நடிப்பதற்கு முன்னதாக ராஜமவுலி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார், நீங்கள் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிய உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

உடனே சமுத்திரக்கனிக்கு ஃப்லைட் டிக்கெட் போட்டு ஹோட்டலும் புக் செய்துள்ளார் தனது சொந்த செலவில். அவர் கூறிய ஸ்கிரிப்ட் கேட்டவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டு ராஜமவுலி சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.

உங்கள் படத்தில் நடிப்பதற்கு நீங்கள் கொடுத்திருப்பது வாய்ப்பு, அதை சம்பளமாக பெற விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்று விட்டாராம். படப்பிடிப்பு முடிந்தவுடன் அவரது மேனேஜர், சார் (ராஜமௌலி) இது உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க என்று செக் ஒன்றே கொடுத்துள்ளார்.

அதை பார்த்து சமுத்திரகனி அதிர்ந்து விட்டாராம், அதாவது இந்த படத்தில் நடித்ததற்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம், சமுத்திரக்கனியின் நல்ல குணங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றுதான் கூறவேண்டும்.

சமுத்திரக்கனியின் இந்த அசுர வளர்ச்சி அவரை அடுத்த கட்டதிற்கு கொண்டுபோய் உள்ளது, தெலுங்கு படங்களில் புக் செய்துள்ளனர். ராஜமௌலியின் மகன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படி தமிழகம் தாண்டி பிரபல நடிகராக முன்னேறி வருகிறார் சமுத்திரக்கனி. கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கப்சா, இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி ஹிந்தி உருது போன்ற 7 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கொடூர வில்லனாக சமுத்திரகனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.