Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியின் அசுர வளர்ச்சி.. ஏழு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் படம்
தமிழில் போராளி, இளைஞர்களுக்கு கருத்து சொல்லும் தலைவர், நல்ல மனிதர் என பெயரெடுத்த சமுத்திரகனி தெலுங்கில் கொடூர வில்லனாக சமீபகாலமாக நடித்து வருகிறார். இதற்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படம் தான்.
அதன்பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் அல வைகுந்தபுராமுலு படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். அல வைகுந்தபுராமுலு படத்தின் டீசர் நேற்று வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமுத்திரக்கனி.
கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கப்சா. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் பெங்காலி ஹிந்தி உருது போன்ற ஏழு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கொடூர வில்லனாக சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.
தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பிரபல நடிகராக முன்னேறி வருகிறார் சமுத்திரக்கனி. கப்சா படம் கே ஜி எஃப் படத்தைப் போன்று பிரமாண்டமாக உருவாக வருகிறது. தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
