Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘நான் ஈ’ பிரபலத்திற்கு வீடு தேடி வந்த கோடி.. நடிப்புக்கு கிடைத்த பரிசு
ஒரு சில நடிகர்களுக்கு அவர்கள் நடிக்கும் மொழிப் படங்களைத் தவிர மற்ற மொழி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து ரசிகர்களும் விரும்பத்தக்க நடிகராக உள்ளார்.
தற்போது அவரது ரசிகர்களின் வட்டாரம் வடக்கு நோக்கி ஹிந்தி வரை சென்றுள்ளது. ஆம். தபாங் 3 படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் ஹிந்தியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி விட்டார். சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தபாங் 3.
இதில் சல்மான்கானுக்கு வில்லனாக நடித்தவர் கிச்சா சுதீப். இந்த மாதிரி படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் நூறு கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தில் கிச்சா சுதீப்பின் நடிப்பை பெரிதும் ரசித்துள்ளனர்.
ஆகையால் சல்மான்கான், கிச்சா சுதீப் ஒன்றரை கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை சுதீப் வீட்டிற்கே சென்று பரிசளித்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து சுதீப், நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்பதை போல தான் இந்த நிகழ்வை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Good always happens when u do good.@beingsalmankhan made me believe this line further with this surprise landing at home along with him.
BMW M5 🤗.
Thank u for the luv u have showered on me n my family sir.
It was an honour to have worked with u n to have had u vist us.🤗🤗🥂 pic.twitter.com/tavTR07M29— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 7, 2020
இதனை சுதீப்பின் ரசிகர்கள் பெரிதும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
