Connect with us
Cinemapettai

Cinemapettai

சிக்ஸ் பேக்கில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சிய ரியாஸ் கான்.. 47 வயதிலும் மிரட்டும் புகைப்படம்

riyaz-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிக்ஸ் பேக்கில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சிய ரியாஸ் கான்.. 47 வயதிலும் மிரட்டும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் மிகப்பெரும் பங்கு வகிப்பவர் ரியாஸ் கான். வில்லனாகவும் பல படங்களில் நடித்தவர். அடிப்படையில் பாடிபில்டர் ஆன இவர், முதலில் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர்.

பிறகு அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு வந்தவர். தற்போது வரை குணச்சித்திர நடிகர்களில் முக்கியமான பங்கை வகிக்கும் இவர், சமீபத்தில் தன் மகனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்தார்.

உடற்பயிற்சியில் எப்பொழுதும் தீவிரமாக செயல்படும் இவர், தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

riyaz-khan

riyaz-khan

இதற்காக முழு உடற் பயிற்சியில் ஈடுபட்ட ரியாஸ் கான் தற்போது ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவுக்கு உடலை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார். 47 வயது மதிக்கத்தக்க இவர், இப்படி உடலை மாற்றியது சினிமா உலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top