fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹனிமூன் போட்டோவை வெளியிட்டு த்ரிஷாவை வெறுப்பேற்றிய முன்னால் காதலர்.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்

trisha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹனிமூன் போட்டோவை வெளியிட்டு த்ரிஷாவை வெறுப்பேற்றிய முன்னால் காதலர்.. காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட படிப்பில் வெளியான படம் தான் பாகுபலி. இதில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர் தான் ராணா டக்குபதி.

இவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஹீகா பஜாஜை காதல் திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் கொரோனா லாக் டவுன் காரணமாக நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தற்போது பிரபல நடிகை நேஹா தூபி நடத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வீடியோ கால் வாயிலாக பேட்டியளித்த ராணா, “இந்த கொரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லை என்றால் நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாமில் ஹனிமூனை கொண்டாடியிருப்பேன்.

ஏனென்றால் எனக்கு ஆர்ட் ரொம்ப பிடிக்கும்” என்று தனது ஹனிமூன் திட்டம் நாசமா போனதை மனம்விட்டு பேசினார்.

தற்போது கல்யாணத்திற்கு பிறகு ராணா, தனது காதல் மனைவி மிஹீகா உடன் கடற்கரையில் எடுக்கப்பட்ட கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

எனவே இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராணா மனைவியுடன் ஹனிமூன் சென்றுள்ளார் என்று சோசியல் மீடியாக்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அதையும் தாண்டி த்ரிஷாவை வெறுப்பேற்றிய உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top