fbpx
Connect with us

Cinemapettai

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜனுக்கு கொரோனா உறுதி.. கலக்கத்தில் ரசிகர்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

எங்க ஊரு பாட்டுக்காரன் ராமராஜனுக்கு கொரோனா உறுதி.. கலக்கத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் 80களில் உச்ச நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். தொடக்கத்தில் உதவி இயக்குனராகவும் அதன்பின் இயக்குனராக சினிமாவில் பணியாற்றிய ராமராஜன் அதன்பின் முழுநேர நடிகராக மாறிவிட்டார்.

இவர் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படமானது தமிழக திரையரங்கில் வருடக்கணக்கில் ஓடி சாதனை படைத்தது.

இளையராஜாவின் இசையில் ‘செண்பகமே செண்பகமே..’ என்ற பாடல் இடம்பெற்ற ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜனின் இயல்பான நடிப்பினால் பாமர மக்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக மாறிவிட்டார்.

நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும், அதிமுக கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராக பொறுப்பேற்றார். அதன்பின் 1998ஆம் ஆண்டு திருச்செந்தூரின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த புரட்சி கலைஞர் இவர்தான் என்று கூறுமளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றிருந்த சமயத்தில் திடீரென்று அவருடைய படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்தது. அரசியலிலும் எதிர்பாராத சரிவை கண்டார்.

2010ஆம் ஆண்டு அதிமுக பரப்புரைக்காக மதுரைக்குச் சென்ற போது, இவருடைய கார் கோர விபத்தில் சிக்கி சாகும் எல்லைக்கே சென்று மீண்டார் ராமராஜன்.

சமீபத்தில் அவர் வீட்டிற்கு ஏசி பழுது பார்க்க வந்த மெக்கானிக்கர் மூலமாக ராமராஜ்-க்கு கொரோனா பரவியுள்ளதால், தற்போது கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொரோனா நோய்த் தோற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் நடிகர் ராமராஜன், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top