Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலியால் துடித்த போதும் அஜித் சொல்லிய ஒத்த வார்த்தை.. நெகிழ்ந்து போன ராஜ்கிரண்
நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் போன்றவராவார். இயக்குனராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் இன்றளவும் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், பவர் பாண்டி போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் சேர்ந்து ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பேட்டி ஒன்று ராஜ்கிரண் தல அஜித்தை பற்றி கூறியது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தல அஜித் மற்றும் ராஜ்கிரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த படம் கிரீடம். இதில் அஜித்துக்கு அப்பாவாக நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தல அஜித் எப்போதுமே உட்காரவே மாட்டாராம்.
அதை கவனித்துக்கொண்டிருந்த ராஜ்கிரனுக்கு அஜித் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. வலியாலும் நடித்துக்கொண்டிருந்த அஜித்திடம் ஒருநாள் நேரடியாகவே, அதிக வலியென்றால் ஓய்வெடுக்கலாமே என கூறியிருக்கிறார்.
அதற்கு அஜீத் தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு உண்மையாக இருக்கவேண்டும் எனவும், தன்னால் படப்பிடிப்பில் எந்த ஒரு தடையும் ஏற்படக்கூடாது என்றும் ராஜ்கிரணிடம் தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த பதிலை கேட்டு ராஜ்கிரண் மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
