தலைவரே, அந்த ‘திருப்பதி லட்டு’ விவகாரம்.. அசர வைத்த ரஜினியின் பதில், இன்னும் ஒரு வாரத்துக்கு இதுதான் கண்டெண்ட்!

Rajinikanth: சமீப காலமாக லட்டு என்ற வார்த்தையை சொல்லவே பிரபலங்களுக்கு பயமாக இருக்கிறது. ஒரு சில நேரங்களில் ஒரு சில விஷயத்தை பற்றி நட்சத்திரங்கள் பேசியே ஆக வேண்டும். அதேபோன்று ஒரு சில நேரங்களில் மௌனமாக இருந்து விடுவது ரொம்பவே நல்லது.

சமீபத்தில் லட்டு வேண்டாம் என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக கார்த்தி என்னவெல்லாம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார் என எல்லோருக்குமே தெரியும். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை தான் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பத்திரிக்கையாளர்கள் ஏற்படுத்தி விட்டார்கள்.

கடந்த வாரம் ரஜினி விமான நிலையம் சென்றிருந்தபோது அவரிடம் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போதே ரஜினிகாந்த் ரொம்பவும் கோபமாக அரசியல் பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று சொல்லி இருந்தார்.

எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிவிடக்கூடாது என்பது ரஜினி ரொம்பவும் உஷாராக இருக்கிறார். கார்த்தி ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இடம் மன்னிப்பு கேட்டது பல தரப்பு மக்களிடம் விமர்சனத்தை பெற்றது. அப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வந்து விடக்கூடாது என ரஜினி தீர்க்கமாக இருக்கிறார் போல.

இன்று ரஜினியை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த பத்திரிகையாளர்கள் முதலில் வேட்டையின் படம் பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள். அதை தொடர்ந்து திருப்பதியில் அட்டு பற்றி ரஜினி இடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சாரி, நோ கமெண்ட்ஸ் என நச்சென்று ஒரு பதிலை சொல்லிவிட்டார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் ரஜினி இப்படி ஒரு பதிலை தான் அவரிடம் லட்டு பத்தி கேட்கும் போது சொல்லுவார் என முன்னமே ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருந்தார்.

சமீபத்தில் ரஜினியிடம் ஹேமா கமிட்டி பற்றி கேட்டபோது கூட எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என சொல்லி இருந்தார். ரஜினிகாந்த் இப்படி நிறைய பிரச்சனைகளுக்கு தெரியாது, நோ கமெண்ட்ஸ் என சொல்வது சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. தற்போது இந்த நோ கமெண்ட்ஸ் என அவர் சொன்னதுக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு ரஜினி தான் கண்டன்ட்டாக இருக்கப் போகிறார்.

வசூல் வேட்டையாட தயாராகும் வேட்டையன்

- Advertisement -spot_img

Trending News