Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்.. இந்த வாட்டி சென்டிமென்ட் இயக்குனருடன்
பரபரப்பாக நடந்த தர்பார் படத்தின் சூட்டிங்கை முடித்த கையோடு தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமானார் தலைவர் ரஜினிகாந்த். அவர் அரசியலில் முத்திரை பதிப்பார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரஜினியோ தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறுத்தை சிவா தற்போது ரஜினிகாந்தை இயக்க இருக்கிறார்.
பேட்ட படத்துடன் இவரது இயக்கத்தில் மோதிய விஸ்வாசம் திரைப்படம் வசூலில் ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
