ஹீரோவாக முயற்சி செய்யும் ரகுவரன் மகன்.. போட்டோ பார்த்தா ஸ்டைலிஷ் வில்லன் மாதிரி இருக்காரே

வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் ரகுவரன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ரகுவரனை ஹீரோவாகும் வில்லனாகும் அறிந்த பலருக்கு அவர் இசையமைப்பாளர் என்பது தெரியாது.

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் லண்டன் இசைக் கல்லூரியில் படித்து உள்ளார். இதுவரை ரகுவரன் 30 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ரகுவரன் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் விசுவின் மகனாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் சிக்கனப் பேர்வழியாக நடித்திருந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

முதல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த வில்லன் காண தமிழக அரசு விருதைப் பெற்றார். வில்லன் என்றாலே கட்டுமஸ்தான உடலும், கம்பீரமான குரலும் இருக்கவேண்டும் என்ற டிரெண்டை மாற்றி, ஒல்லியான உடல் அமைப்பில் மெல்லிய குரலோடு வில்லத்தனத்தை சினிமாவிற்கு கொண்டு வந்தார் ரகுவரன்.

ரகுவரன் கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு தந்தையாக நடித்து இருந்தார். அதற்குப் பின் கடந்த 2008 இல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நடிகை ரோகிணி காதலித்து 1996 இல் திருமணம் செய்து கொண்டார்.

raghuvaran-son
raghuvaran-son

இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வந்தார்கள். தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சாய் ரிஷிவரன் திரைப்பட வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறார்.

திரைத்துறையில் தனது அப்பா சாதித்தது போல் தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது பட வாய்ப்புகளை தேடி வருவது மட்டும் இல்லாமல் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். இப்போதுள்ள திரைத்துறையில் வாரிசு நடிகர்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் எப்படியாது தன்னைப்போல் கொண்டு வர வேண்டும் என்பதற்காக போராடித்தான் வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்