Connect with us
Cinemapettai

Cinemapettai

raghuvaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் ரகுவரன் நடிப்பில் அசத்திய முக்கியமான திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ்சினிமாவில் இவருக்கு அப்புறம் வில்லன் நடிப்பில் முன்னணி நடிகர்களை எதிர்த்து நிற்க ஆளே இல்லை என்னும் அளவுக்கு தன்னுடைய முத்திரையை பதித்து சென்றவர்தான் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றார்.

சம்சாரம் அது மின்சாரம்(1986)

சமீபத்தில் இறைவனடி சேர்ந்த விசுவின் இயக்கத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரகுவரன் நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். விசுவின் கதாபாத்திரத்திற்கு நிகராக ரகுவரனின் கதாபாத்திரம் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் ராஜ்(1987)

நடிகர் ரகுவரன் கதையின் நாயகனாக நடித்து 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்.

அஞ்சலி(1990)

நடிகர் ரகுவரனின் சினிமா வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத படமாக அமைந்தது அஞ்சலி. குணச்சித்திர வேடத்தில் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.

பாட்ஷா(1995)

ரஜினிக்கு வில்லனாக ஆண்டனி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா. ரகுவரனின் மிரட்டலான நடிப்பு சினிமா உலகத்தையே மிரட்டியது என சொல்லலாம்.

ரட்சகன்(1997)

நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் காட்டிய மிரட்சி இந்தியா முழுவதும் பேச வைத்தது.

முதல்வன்(1999)

முதல் அமைச்சர் வேடத்தில் பட்டையை கிளப்பியிருப்பார் ரகுவரன். அந்தப் படத்தில் அவர் பேசிய ஒவ்வொரு வசனமும் இன்றும் இளைஞர்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. இந்த படத்துக்காக ரகுவரனுக்கு பல விருதுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அமர்க்களம்(1999)

தல அஜித்தின் அதிரடியான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றார் ரகுவரன்.

இரணியன்(1999)

முரளி நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரையும் கதிகலங்க வைத்தார் ரகுவரன்.

யாரடி நீ மோகினி(2008)

ரகுவரன் கடைசியாக நடித்த யாரடி நீ மோகினி படத்தில் கூட தன்னுடைய நடிப்பு முத்திரை பதிக்கும் அளவுக்கு சிறந்த தந்தையாக நடிப்பில் சாதித்து சென்றார்.

காலங்கள் கடந்தும் நிற்கும் அவரது தமிழ் சினிமாவின் ஆளுமை அவ்வளவு எளிதில் யாராலும் கைப்பற்ற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top