Connect with us

Cinemapettai

அரசியலில் களமிறங்கும் லாரன்ஸ்? ஆளுங்கட்சி அமைச்சருடன் திடீர் சந்திப்பு

ragava-lawrance

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரசியலில் களமிறங்கும் லாரன்ஸ்? ஆளுங்கட்சி அமைச்சருடன் திடீர் சந்திப்பு

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக களமிறங்கி இயக்குனராக உருவெடுத்து நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து தற்போது முன்னணி நாயகியாக இருப்பவர் லாரன்ஸ்.

இவர் நடிப்பில் வெளியான முனி படத்தின் பாகங்கள் தமிழகத்தில் உள்ள குடும்ப ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதில் நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

தமிழ் தாயின் மீதுள்ள பாசத்தால் அவருக்கு கோவில் கட்டி வணங்குபவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லாரன்ஸ் ஈடுபட்டது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என கருதியவர்களுக்கு மேலும் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

ஆனால் லாரன்ஸ் திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தது அரசியல் அச்சாரமா? என பேச வைத்துள்ளது. இந்நிலையில் அவர் அமைச்சரை சந்தித்து கோரிக்கை ஒன்றை தெரிவிப்பதற்காக மட்டுமே எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் சில தினங்களுக்கு முன்பு தனது ட்வீட்டரில் தன்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருவதாகவும், அதனால் தன் ஒருவனால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் உதவிக்காக பல தலைவர்களிடமும் கேட்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top