Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் ஒரு பொடிப் பையன்.. அவரால் அதெல்லாம் முடியாது.. சர்ச்சை மன்னன் ராதாரவி

vijay-radharavi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ஒரு பொடிப் பையன்.. அவரால் அதெல்லாம் முடியாது.. சர்ச்சை மன்னன் ராதாரவி

நடிகர் ராதாரவி தளபதி விஜய் பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராதாரவி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதிலும் அரசியல் பற்றிய பேச்சுகளில் அனல் பறக்க விடுவார்.

எதையும் வெளிப்படையாக தெரிவிக்கும் மனிதன். வெளிப்படையாக பேசுகிறேன் என்று விவகாரமாக பேசி மாட்டிக் கொள்வதும் அவருக்கே உரித்தான ஒரு அம்சமாகும். சமீபத்தில் கூட தெலுங்கர்களை பற்றி உயர்வாகப் பேசி பல கண்டங்களுக்கு உள்ளானார்.

தற்போது தளபதி விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை குறித்து விமர்சித்துள்ளார் ராதாரவி. அவர் கூறியதாவது, தமிழக அரசியலில் விஜய் ஒரு பொடிப் பையன். அவர் அரசியலுக்கு வந்தால் முதல் அமைச்சர் ஆகிவிடுவார் என்பதெல்லாம் சும்மா கட்டுக்கதை.

நீண்ட நாட்களாக கட்சியில் இருந்து வரும் விஜயகாந்த் தற்போது எதிர்க்கட்சி என்ற பொறுப்பில் அமர்ந்துவிட்டார். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் எவ்வளவு அவசர பட்டாலும் அவர் எதிர்க்கட்சியில் அமரவே இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

தம்பி சீமான் நல்ல கருத்துக்களை முன்வைத்தாலும் அதில் நிலைத்தன்மை எதுவும் இல்லை. நடிகர் விஜய்க்கு இப்போதுதான் 40 வயது ஆகிறது. அதனால் உடனடியாக அரசியலில் சாதிக்க முடியாது. அவருக்கு நீண்ட காலம் எடுக்கும் என்று விஜய் பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சர்ச்சை மன்னன் ராதாரவி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top