அ.தி.மு.க.,வில் இருந்து, தென் இந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும் நடிகருமான ராதாரவி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், ஸ்டாலின் தலைமையில் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், என்னுடைய தாய் கட்சியான தி.மு.க.,வின் தன்னை இணைத்து கொண்டதில் பெருமையாக உள்ளது. இப்போதுள்ள அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல் கட்சியிலும் தகுதியான தலைவர்கள் இல்லை, என்றார்.