சிம்புவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி.. பேட்டியில் உளறிக் கொட்டிய பிரபலம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் அந்த நடிகர் தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலை தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் நன்றாக டான்ஸ் ஆட கூடிய நடிகர் தான் பிரித்திவிராஜ் பல நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டபோது நடுவராக இருந்த சிம்புவுக்கும் அவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனால் அவர் சிம்புவுடன் சண்டையிட்டு நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். இந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிறகுதான் இது விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என்று ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இந்நிலையில் பிரித்திவிராஜ் தற்போது சிம்புவை பற்றி சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது சிம்பு இடைப்பட்ட காலத்தில் ரொம்பவும் குண்டாக பூசணிக்காய் போல் இருந்தார். பின் பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அவர் தற்போது ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

இதை குறிப்பிட்டு பேசிய அவர் சிம்பு உடல் எடையை குறைத்ததற்கு நான் அவரை பாராட்டுகிறேன். ஆனால் இதை தொடர்ந்து அவர் பராமரித்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன் நான் எது சொன்னாலும் கேட்பார். ஆனால் அவருக்கு வாய் தான் ரொம்ப அதிகம் என்று அவர் சிம்புவை பற்றி கூறியுள்ளார்.

தற்போது பிரித்திவிராஜ் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உடல் எடையை குறைத்ததற்கு பின் பல திரைப்படங்களில் நடித்து வரும் சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தலை, கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.