Connect with us
Cinemapettai

Cinemapettai

premji-prasanna

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அண்ணன்கிட்ட சொல்லி வாய்ப்பு வாங்கித் தரேன்.. பிரசன்னாவை கலாய்த்த பிரேம்ஜி

சமீபத்தில் ட்ரண்ட் ஆன ஹீரோ என்றால் அது பிரசன்னாதான். அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற ரூமர் கிளம்பி பெரும் வைரல் ஆனது. இதனால் ரசிகர்கள் பிரசன்னாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் திடீரென பிரசன்னா வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை என்ற செய்தியை வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் விரைவில் தல அஜித்துடன் ஒரு படத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

மேலும் தனக்கு சப்போர்ட் பண்ணி தல அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் சென்டிமென்ட் போட்டுத் தாக்கியிருக்கிறார். இதனை கலாய்க்கும் வகையில் நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரசன்னாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, வலிமை படத்தில் வாய்ப்பு இல்லை என்றால் என்ன, என்னுடைய அண்ணன் வெங்கட்பிரபு கிட்ட சொல்லி மங்காத்தா-2 வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி உள்ளார்.

இது ரசிகர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும் பிரசன்னாவை பொருத்தவரை கொஞ்சம் காண்டாக்க கூடிய விஷயம்தான். இதனை தற்போது சினிமா ரசிகர்கள் ஷேர் செய்து விளையாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top