Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் விஜய்க்கு வரப்போகும் நெருக்கடி.. உடலைக் குறைத்து வேற லெவலில் களமிறங்கும் பிரசாந்த்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆணழகன் என்ற பட்டத்துடன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தனி முத்திரை பதித்தவர் நடிகர் பிரசாந்த். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த வெற்றி படம் என்றால் அது வின்னர் தான்.
அதன்பிறகு படிப்படியாக தன்னுடைய மார்க்கெட் குறைந்து இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனார். பிறகு ஷாக் என்ற த்ரில்லர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்து சினிமாவுக்குள் வந்தவர் அதன்பிறகு அதலபாதாளத்திற்கு சென்று விட்டார்.
மோசமான கதை தேர்வு, பருமன் கொண்ட உடல் என ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஹீரோவாக மாறினார். இடையில் அவ்வப்போது தெலுங்கு சினிமாக்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார்.
பிரசாந்த் பழைய புகைப்படம்:

prashanth-old
இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார். இந்த படத்திற்காக பிரசாந்த் சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து தற்போது பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
பிரசாந்த் புதிய புகைப்படம்:

prashanth-new
