டாப் ஸ்டாருக்கு கம்பேக் கொடுத்ததா அந்தகன்.? 2வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Andhagan Box Office: கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவேளைக்கு பிறகு டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய அந்தகன் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்தது.

ஏற்கனவே பிரசாந்த் சுற்றி சுற்றி ப்ரமோஷன் செய்த நிலையில் அவரை மீண்டும் பார்த்த சந்தோஷம் ரசிகர்கள் முகத்தில் தெரிகிறது. அதனாலேயே தற்போது படம் முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிக வசூலை வாரி குவித்து இருக்கிறது.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் இப்படம்.

அந்தகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அதனால் கதை தெரியும் என்றாலும் படத்தில் பிரசாந்த், சிம்ரன் இருவரும் பட்டையை கிளப்பி இருக்கின்றனர். அதனாலேயே தற்போது படத்தை பார்க்க ரசிகர்களின் கூட்டம் திரையரங்குக்கு படையெடுத்து வருகிறது.

அந்த வகையில் முதல் நாளில் இப்படம் வெறும் 65 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. இது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் இரண்டாவது நாளான நேற்று அதன் வசூல் கொஞ்சம் உயர்ந்து 1.15 கோடியாக இருக்கிறது.

இதனால் படத்தை வாங்கி வெளியிட்டவர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதை தொடர்ந்து பட குழுவினர் தற்போது கிடைத்துவரும் பாசிட்டிவ் ரெஸ்பான்சை சந்தோஷத்துடன் கொண்டாடி வருகின்றனர். அந்த போட்டோவும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது.

மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அந்தகன் படத்தின் வசூல் நேற்றை விட கொஞ்சம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. வரும் வாரத்தில் தங்கலான் உட்பட பல படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதனால் இடைப்பட்ட கேப்பில் அந்தகன் வசூலை எடுத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

வசூலில் உயரும் பிரசாந்தின் அந்தகன்

Next Story

- Advertisement -