Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய்ப்பு கிடைக்கல.. இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி.. அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா
தமிழ்சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் தல அஜித். அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அஜித்துடன் சாதாரண ரோல்களில் நடிக்க கூட பல நடிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அந்த வகையில் என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து தற்போது தமிழ் சினிமா உலகில் நல்ல கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் அருண் விஜய். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
வலிமை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க பல நடிகர்களை இயக்குனர் வினோத் அணுகி வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரசன்னா வில்லன் ரோலுக்காக பரிசீலனை செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த தகவல்கள் வெளியானவுடன் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரசன்னாவை வரவேற்றனர்.
பிரசன்னாவும் தல அஜித் ரசிகர்களுக்கு அவ்வாறு நடந்தால் சந்தோசம் என அவர்களது கமெண்ட்டுகளுக்கு ரிப்ளை செய்து கொண்டிருந்தார். ஆனால் நேற்று வலிமை படத்தில் பிரசன்னா நடிக்க முடியாத காரணத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Dear all pic.twitter.com/Lu8YweJzUC
— Prasanna (@Prasanna_actor) January 21, 2020
இதனால் தல ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இருந்தாலும் பிரசன்னா, தல அஜித் ரசிகர்களுக்கு தன்னுடைய பணிவான நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தல அஜித் ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல இடம் பிடித்துள்ளார் பிரசன்னா.
வருங்காலத்தில் தல அஜித்துடன் நடிக்க ஆசைப்படுகிறேன் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். பிரசன்னா தற்போது மாபியா படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் வெளிவரும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.
