Tamil Cinema News | சினிமா செய்திகள்
“மாஃபியா” அருண் விஜய் கெட் – அப் மாஸ் என்றால், பிரசன்னா மரண மாஸ் ! லைக்ஸ் குவிக்குது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.
அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் மாஃபியா.
இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் பெற்றவர். அடுத்ததாக நரகாசுரன் முழுவதும் முடித்து விட்டார், எனினும் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல். அதே சூழலில் இவர் “நாடக மேடை” என்ற பட அறிவிப்பை வெளியிட்டார், அதுவும் டேக் – ஆப் ஆகவில்லை.
இந்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இசை. கோகுல் பினாய் ஒளிப்பதிவு. ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங்.
Busy day shooting ?? on the move for #MAFIA!! @priyabhavanishankar @karthicknaren_M #sunnyday? pic.twitter.com/dgKJ1N4S8j
— ArunVijay (@arunvijayno1) July 13, 2019
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் பிரசன்னா தான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே அருண் விஜயின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாக நிலையில், பிரசன்னாவின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி உள்ளது.

Mafia
DK என்ற ரோலில் அவர் நடிக்கிறாராம். மாஸ் தான் போங்க.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
