பசுபதி வில்லனாக மிரட்டிய 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரைக்கு பின் காணாமல் போன ரங்கன் வாத்தியார்

நடிகர் பசுபதி பன்முக திறமை கொண்டவர் ஆவார். வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனையிலும் இவர்
தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். இவர் ஒரு மேடை கலைஞரும் கூட. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தூள்: இயக்குனர் தரணி இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் தூள். இந்த படத்தில் வரும் சொர்ணாக்கா என்னும் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இந்த வில்லி சொர்ணாவின் தம்பி ஆதியாக பசுபதி தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். விக்ரமுக்கும், பசுபதிக்கு அதிரடி சண்டை காட்சிகளும் இந்த படத்தில் அமைந்திருக்கும்.

Also Read: கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டுய 5 நடிகர்கள்.. அதிலும் சார்பட்டா ரங்கன் வாத்தியாரே அடிச்சுக்க ஆளே இல்ல

விருமாண்டி: உலக நாயகன் கமலஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் விருமாண்டி. இந்த படத்தில் பசுபதி கொத்தாள தேவர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வில்லனாக மிரட்டியதோடு, மதுரை வட்டார பேச்சிலும் பேசி கலக்கியிருப்பார்.

திருப்பாச்சி: இயக்குனர் பேரரசு இயக்கத்தில், விஜய் நடித்த அதிரடி ஹிட் திரைப்படம் தான் திருப்பாச்சி. இந்த படத்தில் பசுபதி ‘பட்டாசு பாலு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். திருப்பாச்சி படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு, விஜய்யின் அதற்கு முந்தைய ரிலீஸ் ஆன கில்லி திரைப்படத்தின் வசூலையும் முறியடித்தது.

Also Read: பசுபதி நடிப்பில் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்.. முருகேசனாய் கண்ணீர் விட வைத்த தியாகம்

அருள்: சீயான் விக்ரம், ஜோதிகா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் அருள். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். அருள் படத்தில் பசுபதி கஜபதி என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். தூள் திரைப்படத்தை போலவே இந்த படத்திலும் விக்ரமுக்கும், பசுபதிக்கும் அதிரடி சண்டை காட்சிகள் இருந்தன.

கொடி வீரன்: நடிகர் சசிகுமார் தயாரித்து, நடித்த திரைப்படம் கொடி வீரன். இந்த படத்திற்கு எம்.முத்தையா கதை எழுதி இயக்கியிருந்தார். அண்ணன்-தங்கை பாசத்தை மைய்யமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் பசுபதி வில்லங்கம் வெள்ளைக்காரனாக நடித்திருந்தார்.

சுள்ளான்: நடிகர் தனுஷ் முதல் முறையாக ஆக்சன் ஹீரோவாக நடித்த திரைப்படம் சுள்ளான்.ஏ. சந்திரசேகரன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். கல்லூரி மாணவனாக வரும் நடிகர் தனுஷை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எதிர்க்கும் வில்லனாக பசுபதி நடித்திருந்தார்.

Also Read: பசுபதியை வளர்த்துவிட்ட 6 படங்கள்.. சார்பட்டா பரம்பரை படத்தில் மிரட்டிய ரங்கன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்