Tamil Cinema News | சினிமா செய்திகள்
பார்த்திபன் கண்ட புதுமைப்பெண்.. டுவிட்டரில் அலப்பறை செய்யும் சதீஷ்
நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தை எழுதி, இயக்கி மற்றும் அவரே நடித்தும் இருந்தார். விமர்சகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூல் ரீதியாக கொஞ்சம் அடி வாங்கியது என்றே சொல்லலாம். இருந்தும் அவரது முயற்சியை பாராட்டாத ஆளே இல்லை.
இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான ஹீரோயின் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 25 வயது மதிக்கத்தக்க வசீகரமான பெண் வேண்டுமென அறிவித்திருந்தார்.
நக்கல் செய்வதற்கு பெயர்போன காமெடி நடிகர் சதீஷ், தனது பெண் வேடமிட்ட புகைப்படத்தை பதிவு செய்து வாய்ப்பு கேட்டு அட்ராசிட்டி செய்தார்.
இதனை பார்த்திபன் தனக்கே உரிய பாணியில், நகைச்சுவை நயத்தோடு இவ்வளவு அழகான பெண் தனக்கு தேவையில்லை என ரிப்ளை செய்துள்ளார். இதனால் டிவிட்டரே கலகலவென ஆயிற்று.
இதோ அவர்களது ட்விட்டர் சேட்டை :
இவ்வளவு அழகை வைச்சி என்ன செய்றது ? சதீ(டீ)ஷ்கர் பொண்ணு மாதிரி இருக்கு!
தலைகானில பஞ்சு இருந்தா தூங்கலாம்,தங்கம் இருந்தா ? https://t.co/T8l6EIADpe— R.Parthiban (@rparthiepan) September 28, 2019
