Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அப்பாவின் கேப்மாரி ட்ரெய்லரை கேப்பே இல்லாமல் வச்சு செய்த பார்த்திபன்.. பங்கம் பண்ணிட்டாருபா!
எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய் என்பதை தாண்டி தற்போது விஜய்யின் அப்பா தான் எஸ்.ஏ. சந்திரசேகர் என சொல்ல வைத்துள்ளது தளபதி விஜய்யின் வெற்றி. புரட்சி இயக்குனர் என பெயரெடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர் அடல்ட் படத்தில் களம் இறங்கியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ஜெய் நடித்த கேப்மாரி படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. வாயில் கூட சொல்ல முடியாத அளவுக்கு கூச்சமே இல்லாமல் இரட்டை அர்த்த வசனங்களை திணித்து வைத்துள்ளனர். சரின்னு இன்னும் கொஞ்சம் ஓட்டிப் பார்த்தா பெட்ரூம்ல கிஸ் அடிக்கிறாங்க, பாத்ரூம்ல கிஸ் அடிக்கிறாங்க, நடக்கும்போது கிஸ் அடிக்கிறாங்க, அப்பப்பா முடியல.
சரி.. யாரு இப்படியெல்லாம் பண்ணுறதுன்னு பார்த்தா நம்ம குடும்ப குத்துவிளக்கு அதுல்யாரவி. சுத்தம். யார்ரா இவ்வளவு கேவலமா படம் எடுத்துருக்கிறதுனு கொஞ்சம் உள்ள அலசிப் பார்த்தால் நம்ம புரட்சி இயக்குனரு.
என்ன கண்றாவியோ. இதுக்கும் இளைஞர் கூட்டம் அலைமோதும்.. பார்ட்-2 வரும். இன்னும் என்னல்லாம் கொடுமையை பாக்கப் போறேன்னு தெரியல.. இத பார்த்திபன் ட்விட்டர்ல வச்சு செஞ்சாரு பாருங்க, அல்டிமேட் கலாய்! எதுனா புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்கப்பா!
நீங்களே பாருங்க :
S a c-C M ஆகி S e x பற்றியும்
Life பற்றியும் கடல் அளவு Deep ஆக அலசி,ஜெய்'க்க தன்
'மன வய'தில்'உள்ள குளிர் சாதன குட்டிகளை வைத்து 'புள்ளைங்கோ' நெஞ்சில் Temperature அதிகப்படுத்துகிறார்.
உ'தட்டில் 'Gap' இல்லாமல் மாறி 'மாரி'இட்டு நிரப்புகிறார் இளமை லேகியத்தை'A'https://t.co/tGGg19nyEf— R.Parthiban (@rparthiepan) November 5, 2019
