Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
பிரபல நடிகரை வளைத்துப்போட அடித்துக் கொள்ளும் இரண்டு முன்னாள் காதலிகள்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் தான் அந்த நடிகர். சமீபகாலமாக படங்கள் இல்லை என்றாலும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க உள்ளார்.
அந்த நடிகரின் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். பெரிய நடிகர்களுக்கு இணையாக மாஸ் ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளதால் பல நடிகர்களுக்கும் அவர்மீது பொறாமை உள்ளது.
ஆனால் அந்த நடிகர் தன்னுடைய இளம் வயதில் காதல் தோல்வியால் அவதிப்பட்டுள்ளார். முதலில் பெரிய நம்பர் நடிகையின் காதல் தோல்வியில் இருந்து மீள்வதற்காக பப்ளிமாஸ் நடிகை மீது ஆசை கொண்டார்.
அவர்கள் இருவருக்கும் முன்னர் பிரபல நடிகருக்கு சின்ன நம்பர் நடிகை மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காதல் படம் ஒன்று அதிரி புதிரி வெற்றி பெற்றது.
ஆனால் அந்த சமயத்தில் அந்த நடிகை நடிகர் ஒருவரின் மீது காதல் கொண்டு இருந்தார். அந்த காதல் சமீபத்தில் புட்டு கொண்டது. அதேபோல் அந்த நடிகருக்கும் தன்னுடைய பழைய இரண்டு காதலிகளுக்கு பிரேக் அப் ஆனது.
இந்நிலையில்தான் சின்ன நம்பர் நடிகையும் பப்ளிமாஸ் நடிகையும் எப்படியாவது அந்த நடிகரை வளைத்துப் போட்டு விட வேண்டும் என அந்த நடிகருக்கு தூதுவிட்டு வருகிறார்களாம். விரட்டி விரட்டி அந்த நடிகருக்கு போன் பண்ணுவதும் பரிசுகள் அனுப்புவதும் என காதல் கொடி கட்டி பறக்கிறதாம்.
ஆனால் அந்த நடிகருக்கு பெரும்பாலும் இவர்கள் மீது தற்போது ஈர்ப்பு இல்லை என்பது போல தான் தகவல்கள் தெரிகிறது. இருந்தாலும் வசதிக்கு வேண்டாம் அசதிக்கு பயன்படுத்திக் கொள்ளலாமே என்கிறார்களாம் அவரது நண்பர்கள்.
