Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசுரன் பட வில்லனுக்கு அடித்த ஜாக்பாட்.. பிரபல ஹீரோவுடன் இணைகிறார்
Published on
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.
நடிப்பில் புதிய உச்சத்தை தொட்டிருக்கும் தனுஷ்க்கு இந்தப் படம் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. வெற்றிமாறனின் ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருப்பவர் நிதிஷ் வீரா. தனுஷை ஏமாற்றும் வேடத்தில் நடித்த இவரது கேரக்டருக்கு தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் லாபம் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
