Connect with us
Cinemapettai

Cinemapettai

napoleon

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடிய நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மூத்த மகனுக்காக அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

தமிழ் சினிமாவில் ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தின் மூலம்  கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நெப்போலியன் தன்னுடைய வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் முரட்டுத்தனமான பேச்சிற்க்கும் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இன்றுவரை தமிழ் மக்களின் ஞாபகத்தில் மாறாத இடம் பிடித்திருக்கிறார் நெப்போலியன்.

அதுமட்டுமில்லாமல் பல படங்களில் நடித்து சாதனை புரிந்த நெப்போலியன் தனது தொழிலிலும் பெரும் வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நெப்போலியனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அதாவது சென்னையில் தொழில் தொடங்கிய நெப்போலியன் அதற்குப்பின் அமெரிக்காவில் கால்பதித்து குடும்பத்துடன் அங்கேயே செட்டிலாகி விட்டாராம்.  அதுமட்டுமில்லாமல் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்று இரு மகன்கள் உள்ளனர்.

அதில் மூத்த மகனான தனுஷ் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் உள்ளார். இதை போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திருநெல்வேலி அருகே மருந்துவமனை வைத்து சிகிச்சை அளித்து வருகிறார் நெப்போலியன்.

பல வருடங்களாக இவர் நடத்திவரும் மருத்துவமனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படம்  ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் அதே  கம்பீரத்தோடு இருக்கீங்க சார்’ என்று தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top