Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகர் நீலு மரணம்.! வருத்தத்தில் திரையுலகினர்
பழம்பெரும் நடிகர் நீலு மரணமடைந்தார் தற்பொழுது அவருக்கு வயது 82 ஆகும். இவரின் இயற்பெயர் ஆர். நிலகண்டன் இவர் நாடகம் மூலம்தான் திரைப்படத்தில் அறிமுகமானார், இவர் சினிமா, நாடகம், டிவி நாடகம் என பலவற்றில் நடித்துள்ளார், இவர் 7000 க்கும் மேற்ப்பட்ட நாடகத்திலும் 160 க்கும் மேற்ப்பட்ட படத்தில் நடித்துள்ளார்.
இவர் மற்றும் மறைந்த சோ ராமசாமியின் தம்பியுடன் இணைந்து பைன் ஆர்ட்ஸ் என்ற நாடக கம்பெனியை ஆரம்பித்தார் அதன் மூலம் பல நாடகத்தை நடத்திவந்தார். இவர் முதல் முதலில் ஆயிரம் பொய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
கெளரவம், அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே. சம்பந்தம், அந்நியன், ரெண்டு, கல்யாண சமையல் சாதம், திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய படத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு ஆறு மாதகாலமாக உடல்நிலை சரியில்லாமல் மோசமான நிலையில் இருந்தார் இந்த நிலையில் இவர் உயிர் பிரிந்தார். இவரின் மரணத்திற்கு பல நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கதலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
