Tamil Cinema News | சினிமா செய்திகள்
வால்டர் படத்தில் கௌதம் மேனன் நடிக்கவிருந்த ரோலில் நட்ராஜ்!
Published on
புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நட்ராஜ் சுப்பிரமணியம் “சதுரங்க வேட்டை” தொடங்கி பல்வேறு வித்தியாசமான படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் சிறப்பாக நடித்திருந்த நட்டி, சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் “வால்டர்” படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார்.
வால்டர் படத்தின் இயக்குனர் அன்பு இது குறித்து கூறுகையில் பிற படங்களை இயக்கும் பணிகளின் காரணத்தால் கௌதம் மேனன் கால்ஷீட் எங்கள் படத்திற்கு ஒத்துவராமல் போனது. அதன் பிறகு பல நடிகர்களை இக்கதாப்பாதிரத்திற்கு தேடிப் பார்த்தோம்.
ஆனால் சரியாக வரவில்லை. இறுதியில் கௌதம் மேனன் கதாபாத்திரத்திற்கு ஒளிப்பதிவாளர் நடராஜ் சிறப்பாக இருப்பாய் என கருதி அவரை அணுகினோம் . அவரும் ஒப்புக்கொண்டார் என்றார்.
