Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷ் பக்கம் தாவல்.. இடம் மாறிய பிரபல நடிகர்
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோர் பற்றி எது சொன்னாலும் அது சண்டையாகவும் சர்ச்சையாகும் மாறிவிடுகிறது. ஏன் தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் யாரேனும் சிவகார்த்திகேயன் படத்துக்கு வேலை செய்தால் உடனே அது ஒரு பெரிய பஞ்சாயத்தை கிளப்பி விடுகிறது.
அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரபல கேமராமேன் நட்டி என்கிற நட்ராஜ், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதுதான்.
சிவகார்த்திகேயனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி படம் நம்ம வீட்டுபிள்ளை. சொக்கத்தங்கம், கிழக்குசீமையிலே போன்ற படங்களின் அப்பட்டமான காப்பியாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம். இதில் நடித்தவர் நட்ராஜ்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கர்ணன் படத்தில் தனுஷ் பேட்ட ரஜினி கெட்டப் போட்டிருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியது.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த சுருளி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு வருகின்ற 20ஆம் தேதி ஹீரோ என்ற படம் ரிலீசாக உள்ளது. ஆனால் ஹீரோ படம் கதை திருட்டு வழக்கில் மாட்டி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கலக்குங்க நட்ராஜ் சார்..
