Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் படத்திற்காக வயதான கெட் அப்பில் அஞ்சாதே நரேன்.. வைரல் போட்டோ உள்ளே!
சுனில் குமார் என்பது நிஜ பெயர் ஆனால் சினிமாவுக்காக நரேன் ஆக மாறினார். மலையாள சினிமாவில் அறிமுகமானார், நம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயம் தான். மிஸ்க்கின் இவரை சித்திரம் பேசுதடி வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
முகமூடி, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு ஏற்ற தீனியாக அமைந்தது. இவர் தமிழில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படத்தில் இன்ஸ்பெக்ட்டர் வேடத்தில் நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.
கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் அடுத்து கேங்க்ஸ்டர் படமான விக்ரம் இயக்க உள்ளார். கமல் போலீஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையவர் விவரம் தான் அதிகாரபூர்வமாக யாருக்கும் தெரியவில்லை. விஜய் சேதுபதி, பாஹத் பாசில், ஆன்டனி வர்கீஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பு அறிவு சமீபத்தில் இணைந்தனர்.
இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் நரேன் பதிவிட்ட போட்டோ பலரது கவனத்தை பெற்றுள்ளது. “40 ஆண்டுகள் கழித்து இப்படி தான் இருப்பேன். அதுவரை இந்த பயணத்தின் நினைவுகள் உடன் இருக்கும். இந்த போட்டோ நினைவு படுத்தும்.” என பதிவிட்டுள்ளார்.
இவர் வெறும் போட்டோ பதிவிட்டு இருந்தால் கூட ஏதோ செல் போன் ஆப்பில் எடிட் செய்யப்பட்டது என பலரும் நினைத்திருப்பர். ஆனால் இந்த போட்டோவை க்ளிக்கியது லோகேஷ் கனகராஜ் என பதிவிடவே ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. வயதான கெட் அப் எனவும் பதிவிட இது கட்டாயம் லோகேஷ், கமல் அவர்களை வைத்து இயக்கும் விக்ரம் படத்தில் நரேனின் கெட் அப் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

actor naren
அர்ஜுன் தாஸுக்கு கைதி பிறகு மாஸ்டர் ஏற்படுத்தி கொடுத்த வெற்றி போல நரேனுக்கு ,விக்ரம் படம் மாஸாக அமைய சினிமாபேட்டை சார்பில் வாழ்த்துக்கள்.
